அனிராஜி, அட்லாண்டா கவிதை

ஆய்ந்து ஓய்ந்து
சோர்ந்த நேரத்தில்…
சற்றும் எதிர்பார்க்காத
சமயத்தில்…
பதின்ம வயது
மகள் தரும்
நிறம் மணம் சுவை
திடமில்லாத தேநீர்
மன ஆழம் வரை
தித்திப்பதும்,
அந்த சுவை
அருகிலில்லாத
அன்னையை
நினைவடுக்கில்
உணரச்செய்வதும் ஏன்?