காப்பி/அழகியசிங்கர்

தினமும் வீட்டிலேயே
இரண்டுக்கும்
மேலே காப்பி
குடிக்கும்
பழக்கம் எனக்குண்டு
மனைவி
ஒவ்வொரு முறையும்
காப்பி தயாரிக்கும் போது
முணுமுணுக்காமல் இருப்பதில்லை
இதைத் தவிர
மனோஜ் பவனில்
நண்பருடன்
காப்பியைப்
பகிர்ந்து கொள்கிறேன்
வெங்கடேஸ்வரா
போளி ஸ்டாலுக்குப்
போனால்
பஜ்ஜியுடன் காபியும்
உள்ளே போகும்
தேவலோகத்து அமிர்தமாய்
நினைக்கவில்லை
ஆனால்
குடிகாரன்போல் காப்பியை
நிறுத்த முயற்சி
செய்து
தோல்வியை
கண்டவன்