சான்றோர் சந்திப்பு/நாகேந்திர பாரதி

இலண்டன் மாநகர ஐக்கிய ராஜ்ய தமிழ்த் துறையின் நேற்றைய சான்றோர் சந்திப்பு நிகழ்வு அழகியசிங்கரின் புகழ் மகுடத்தில் மற்றும் ஓர் பொன் சிறகு .

சக படைப்பாளி ஒருவரின் சாதனைகளை உலகத் தமிழர்க்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்திர நீலன் சுரேஷ் அவர்கள் பாராட்டுக்கு உரியவர் .

இந்த அமைப்பைப் பற்றிய விளக்க உரையோடு தொடங்கி , அழகியசிங்கரின் அறிமுக உரை , அவரின் நேர்காணல் , வாழ்த்துரைகள் , நன்றி உரை என்று அழகாக ஒருங்கிணைத்தார் .

இலக்கியத்திற்கு சிறு பத்திரிகைகளின் பங்களிப்பு என்ற தலைப்பிற்கு ஏற்ற முறையில் பேட்டி கண்டு சிறு பத்திரிகைகளின் வரலாற்றையும் அதில் நவீன விருட்சத்தின் பங்கையும் , அதற்காக அழகியசிங்கர் மேற்கொண்ட பணிகளையும் அவர் மூலமாகவே வெளிக் கொணர்ந்தார் .

தொடர்ந்து ஆசான் வ வே சு அவர்கள் முதல் , வாழ்த்துரை வழங்கிய அனைவருமே நட்பும் உரிமையும் கலந்து கிண்டலும் சிரிப்புமாகப் பேசிய பேச்சுக்கள் பார்க்கவும் கேட்கவும் அழகாகவும் இனிமையாகவும் இருந்தன .

இனிமையான மாலைப்பொழுதில் முழுமையான இலக்கிய உணவை உண்ட திருப்தி . இந்த நிகழ்வில் என்னையும் அறிமுக உரை ஆற்ற அழைத்த அழகியசிங்கர் அவர்கட்கும் இந்திரநீலன் சுரேஷ் அவர்கட்கும் நன்றி .

https://fb.watch/eiDmOSP_Yl/