போக்கு! /அன்புடன் ஆர்க்கே!

வனம் வயல் மலை
என திக்கெட்டும்
திரிந்து வளைந்து குழைந்து
சுழித்துத் திரிகிறது–
திமிர்த்தனத்து நதி!

இருந்த இடத்திலிருந்தபடி
மொத்த நதியையும்
அதன் நிறம் சுவை குணம் மாற்றி
தனக்குள் சுருட்டி
எடுத்துக் கொண்டுவிடுகிறது-
ஆழமைதிக் கடல்!