
O
பொதுவாக நிகழ்ச்சிகளில் மாலைகள் அணிவிக்கப்பட்டவுடன், நாம் சில நொடிகளில் அந்த மாலைகளை கழற்றி விடுவோம், ஒருவிதமான போலி வினயத்தோடு. யோகி தனக்கு மாலை அணிவித்தால் அதை முழுமையாக ஏற்று அணிந்திருப்பார். சன்னிதித் தெரு இல்லத்தில் ஆண்டுக் கணக்காக தொங்கி கொண்டிருந்த, காய்ந்து உலர்ந்த
மாலைகள் அவைகளே !
O
அதுபோல அவர் நமக்கு மாலை அணிவித்தால், அதை உடனே கழற்ற சம்மதிக்க மாட்டார். அவரோடு இருக்கும்வரை அந்த மாலை நம் கழுத்தை அலங்கரித்துக் கொண்டே இருக்கும். மாலைக்கும், மனிதனுக்கும் மரியாதை தந்தவர் யோகி !
O
நெல்லை குருவையா ரெட்டியார் யோகி தமக்கும் , தமது துணைவியாருக்கும் அணிவித்த மாலைகளை ஒரு கண்ணாடித் தாளில் பொதிந்து தமது வீட்டில் பூஜை அறையில் தொங்கவிட்டு, பகவான் அணிவித்த மாலை என்று ஆண்டுக் கணக்காக பாதுகாத்த வந்ததை அடியேனே கண்டு களித்துள்ளேன்.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா
