
வெளியிலிருந்து திரும்பி வந்ததற்கு
வீட்டிற்குள் நுழைய விருப்பமில்லை
மனதில்லாமலே வேப்பமரக் கிளையில்
சென்றமர்ந்தது ஒரு இலையாக
பினபு
இருள் நிற வெளவாலாக சபிக்கப்பட்டது
கண்ணுக்குத் தென்படும்
ஒவ்வொரு இலையும்
ஒவ்வொரு வெளவாலாக சபிக்கப்பட்ட
மனதுகள் தானோ
என உறைந்தேன்
இரத்தத்தில் உரசும் அவஸ்தையில்
இமைகளும் மூடவில்லை
இரவெல்லாம்
திரவப் பட்டாம் பூச்சியும்
தத்தி தத்தி தரை இறங்கியது
காலை
ஒப்பனை கலைக்கப்பட்ட வெளவால்கள்
கோலம் போட வந்த
கொலுசுக் கால்களில்
புள்ளிமாவாய் ஒட்டிக் கொண்டு
உட்புகுந்து வீட்டிற்குள் நுழைந்து விட்டன
அவ்வளவு தந்திரமாக
