இலக்கிய இன்பம் 50/கோவை எழிலன்

வெறும் கூடு வருகுது தலைவன் பணிமுடிந்து தேரில் விரைவாக வருகிறான். அப்பொழுது மேலே மேகங்கள் ஓடுவதைக் காண்கிறான். அதன் வேகத்தோடும் தன் காதல் கொண்ட மன வேகத்தோடும் ஒப்பிட்டால் தேர் ஓடாமல் நிற்பது போல் அவனுக்குத் தோன்றுகிறது.

அம்முகிலினங்களையே இராமன் போன்ற நந்திவர்மன் அரசாளும் நாட்டில் உள்ள தன் காதலியிடம் தூதாக அனுப்பி தன் உயிர் ஏற்கனவே அவளிடம் இருப்பதால் உடல் மட்டும் ஓடாத தேரில் வருவதாக உரைக்க வேண்டுகிறான்.

நந்திக்கலம்பகத்தில் வரும் இனிமையான பாடல் இது

“ஓடுகிற மேகங்காள்! ஓடாத தேரில்வெறும்

கூடு வருகுதுஎன்று கூறுங்கோள் – நாடியே

நந்திச்சீ ராமன்உடை நல்நகரில் நல்நுதலைச்
சந்திச்சீர் ஆம்ஆகில் தான்”