
நேற்று இன்று நாளை என
எப்போதும்…
நம் காதல் நிரந்தரமாய் நம்மிடமே!
இன்று போய் நாளைவா
எனச் சொன்னது
நேற்றைய நம் காதல்…
இன்று நாம் செய்யும் காதல்
நேற்றைய காதலின் மிச்சமோ?
நாளைய காதலின் தொடக்கமோ?
நேற்றைய நம் காதல்
நாளைய திருமணத்திற்கு…
இன்று ஒப்பந்தம் செய்ததோ?
நேற்று நம் பெற்றோர் செய்த…
நாளை நாம் பெற்றோர்… செய்யும்…
காதலுக்குள் பதுங்கி ஒளிந்துள்ளது
இன்று நாம் செய்யும் நமக்கான காதல்!
நேற்றும் இன்றும் நாளையும்
உலகத்தில் எபோதும்…
நிலைத்து வாழும்…
நமக்கான காதல்… காதல்… காதல்…
