காதல் – நேற்று, இன்று , நாளை /நாகேந்திர பாரதி

(நவீன விருட்சம் நிகழ்வில் இன்று வாசித்த கவிதை)


உண்ணும் உணவும்
உடுக்கும் உடையும்

இருக்கும் இடமும்
எல்லாம் மாற,

காதல் மட்டும்
கல்லா என்ன

கற்பின் கோடே
கரையும் போது

காதல் கோடும்
காலம் மாற்றும்

உடலைத் தொட்ட
உணர்ச்சி தாண்டி

உள்ளம் தொட்ட
உணர்வு நிற்கும்

நேற்றும் இன்றும்
நாளையும் என்றும்

One Comment on “காதல் – நேற்று, இன்று , நாளை /நாகேந்திர பாரதி”

Comments are closed.