எதிர்பார்ப்பு/ நாகேந்திர பாரதி

நவீன விருட்சம் நிகழ்வில் இன்று வாசித்த கவிதை

கால்கள் எதிர்பார்த்த தேடல்
காதல் வசிக்கின்ற வாசல்

கண்கள் எதிர்பார்த்த காட்சி
கன்னி வருகின்ற மாட்சி

செவிகள் எதிர்பார்த்த சிரிப்பு
சிலம்பு ஒலிக்கின்ற சிணுங்கல்

கைகள் எதிர்பார்த்த தொடுதல்
கிளையை அசைக்கின்ற தென்றல்

தாகம் தணிக்கின்ற தண்ணீர்
தவிப்பைத் தீர்க்கின்ற பேச்சு

உருகி வழிகின்ற மெழுகு
உள்ளம் கரைகின்ற உருக்கம்

இரவை அணைக்கின்ற வெளிச்சம்
இதயம் எதிர்பார்க்கும் இரக்கம்

நெஞ்சம் எதிர்பார்த்த நெருக்கம்
நெருப்பைத் தணிக்கின்ற நேசம்