

காதலில் உயிர்த்தேன்.
நேற்று அப்பா.
இன்று நீ.
நாளை நம் மகன்.
இட்டு நிரப்பி வைக்கும்
கலங்கள் கூடியபடியே.
பொங்கிப் பிரவகிக்கிறது
காதல்த் தேனமுது.
ஒரு கலத்தின் மீதியில்லை
மறு கலத்தில்.
எல்லாமும் நிரம்பி
என்னுள்ளும் நிரம்பித்
ததும்புகிறது
காதல் உயிர்த்தேன்.
. ( இன்று 22.07.22 விருட்சம் கவிதை நேசிக்கும் நிகழ்வில் வாசித்த கவிதை ).
