
ஊதி ஊதிப் பெரிதாக்கி
அதிலே
மயங்க வைத்துக்
கிறங்கடிக்கிறான்
நாதஸ்வர வித்வான் !
ஊதி ஊதிப் பெரிதாக்கி
ஊரெல்லாம்
விற்கிறான்
பலூன் காரன் !
ஊதி ஊதிப் பெரிதாக்கி
உள்ளே உயிராய்
ஒளிந்திருக்கிறான்
அந்தக்
காற்று வியாபாரி !
இந்த விளையாட்டெல்லாம்
காற்று
இருக்கும் வரை.
(23.07.2016)

காற்றடைத்த கவிதை அருமை.
காற்றடைத்த பைதானே நாம்!
நன்றி