
என்ற தலைப்பில் நல்ல கவிதைகளை நண்பர்கள் வாசித்தார்கள் .
அழகாக பாராட்டி சிறப்பாக நிறைவு செய்தார் வ.வே.சு.சார்
அந்த நிகழ்வில்
நான் வாசித்த
எனது கவிதைகள்(?)
நேற்று
காதல்
காதல் உணர்வுகளால் எழுப்பப்பட்ட ஒரு கற்பனை உலகம் .
அதில் இரண்டு பேர் தான் வாழ முடியும்.
இணைந்தோ
அல்லது
நினைவுகளை சுமந்தோ
என் அம்மாவின்
பெயரும்
பாட்டியின் பெயரும் ஒன்றாக இருந்ததால் அப்பா
பார்வதி என்று பெயரிட்டு பாரு என்று அழைப்பார்.
பாருவுக்கு பிடிக்கும் என்று மாம்பழம் ,
சிகப்பு கலர் புடவை இன்னும் என்னென்னவோ வாங்கிக் கொடுப்பார்.
பார்வதி என்ற பெயர் பரம்பரையில் பலருக்கும் வைத்தாயிற்று.
அம்மாவின்
அந்திம காலத்தில் அவளுக்கு பிடிக்கும்
என மாம்பழம் வாங்கி வந்தேன் .
அம்மா சொன்னால் எனக்கு மாம்பழம் பிடிக்காது .
ஒருவேளை
பார்வதிக்கு
பிடிக்குமா என்னமோ?
என்றாள்
- இன்று
படித்து முடித்து பன்னாட்டு நிறுவனத்தில்
வேலை பார்க்கும் மகள் “உள்ளே வாடா ” என்றழைத்து தன் எதிர்கால கணவனை
அறிமுகம் செய்து வைத்தாள்.
பார்த்துக் கொண்டிருந்த அத்தையிடம்
மெதுவாகச் சொன்னேன்.
” காலம் ரொம்ப மாறி போச்சு “
அமைதியாகச் சொன்னாள் அத்தை.
ஆமாம்.
நான் கூட இந்த காலத்தில் பிறந்திருக்கலாம் என்று.
3 நாளை
அவர்கள் காதலில் பெரிய பிரச்சனை.
நீதிமன்றம் தலையிட வேண்டுகோள்.
அப்படி என்ன பிரச்சனை ஜாதிய
மதமா
பணமா
…….
…….
இவை
எதுவும் இல்லை.
அவர்கள் ஒரே பாலினமாம்.

கடைசியில் வைத்தீர்களே ஒரு சூடு! அப்பப்பா!
arumai arumai