
ஊதி நிரப்பிய பலூனில்
குழந்தை மனம் பூசிய
அவன் சுவாசக்காற்று..
தத்தித்,தவழ்ந்தோடும்
குழந்தை கண்ணனை
உருளையில் கட்டிப்போடும்
யசோதையாய்..
பலூனை
நீண்ட கயிற்றில் கட்டி
தோளில் சுமக்கையில்
தாயைப் போன்றே தோன்றும்
என் அகவிழிகளுக்கு…
அவனது வாழ்வு
குழந்தைகள் சூழ்
உலகம்.
