காதல் கவிதை !/பி. ஆர். கிரிஜா

காதல் கவிதை

பாட வேண்டுமடி

கவிதை அரங்கினிலே

இனிய நண்பர்

மௌலியின்

அன்பு விண்ணப்பம் !

நீயே தென்றலாய்

என்னுள் கீதம்

இசைக்கயிலே

காதல் கவிதையிலே

ஏதடி ரசம் ?

மெல்லிய சலங்கை

ஒலி உன் வரவை

பறை சாற்றுதடி !

என் அருமை பைங்கிளியே !

உன் நினைவே

என்னுள் ரசவாதம்

புரியுதடி!

பவள வாய் நீ திறந்து 

விளிக்கையிலே

கவிதை வெள்ளமாய்

மடை திறந்து வழியுதடி !

புத்தம் புது புனலாய்

நீயே எந்தன்

புதுக் கவிதை !

                 ***********************************

21/07/2022

One Comment on “காதல் கவிதை !/பி. ஆர். கிரிஜா”

  1. அருமை

    ஒரு குழந்தையைப் பார்த்து சொல்வதாகவும் எடுத்துக்
    கொள்ளலாம் .
    நன்றாக இருக்கிறது

Comments are closed.