எஸ்.சண்முகம் கவிதை

அதிக தடவை கடந்து சென்ற
பழம்பாலத்தின் கீழோடும் சிற்றாற்றை
இந்நாள்வரை சிறிதும் குனிந்து பார்த்ததில்லை

இம்முறை பாலத்தின் நடுவில் நின்று
அதன் கைப்பிடிசுவரில் சாய்ந்து
குனிந்து பார்க்கையில்

இருஉள்ளங்கைகள் இணைந்திருக்கும் அளவில்
மிதந்தும் மூழ்கியும் உள்ளன
ஆழ்பச்சை இலைகள்

பாசியுடன் ஒன்றுக்குள் மற்றொன்று கிடைக்கோடுகளாய்ச் சிக்கியுள்ள சுண்டுவிரலளவு தடிமனான வேர்களுக்கிடையில்
மந்தகதியிலோடும் நீரினில்
சிறுமீனொன்றின் துள்ளலில் வளைகிறது
இந்நொடி.