காலிப் கவிதை/மொழிபெயர்ப்பு  : க மோகனரங்கன் 

இடத்தாலும்

காலத்தாலும் நான்

கட்டி வைக்கப்பட்டிருக்கிறேன்.

இஷ்டப்படி

கண்ணீர் சிந்தவும்

என்னால் இயலாது .

கடலை நான் அழைக்கவேண்டுமானால்,

எனக்கொரு பாலைவனத்தை

தாருங்கள் !