யோகி இன்றொரு சேதி -112/விசிறி சங்கர்


O
ஒருமுறை சன்னிதித் தெரு இல்லத்தில் யோகி தரிசனம் கொடுத்து வந்த வேளையில் கேரளத்தைச் சேர்ந்த இருவர் யோகியை தரிசிக்க வந்தனர். யோகி அவர்களை அமரச் செய்தார்.
O
அவர்கள் பெயர், ஊர் விபரங்களை யோகி கேட்க அவர்கள் பதில் கூறினர். அதில் ஒருவர் இஸ்லாமியர்.
O
அடுத்து அவர்கள் என்ன தொழில் பார்க்கின்றனர் என்று யோகி வினவ, அவர்கள் இருவரும் ஒரே மாதிரி செருப்புக் கடை வைத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
O
சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் யோகி அதே கேள்வியைக் கேட்க அவர்களும் அதே பதிலைக் கூறினர். மேலும் இரண்டு மூன்றுமுறை இடைவெளி விட்டு என்ன தொழில் செய்கிறீர்கள் என்று யோகி வினவ, அவர்கள் செருப்புக் கடை என்றே மீண்டும் மீண்டும் பதில் கூறி இருக்கின்றனர்.
O
அடுத்து அங்கிருந்தோர் ஒவ்வொருவரையும் அவர்களிடம் அதே கேள்வியைக் கேட்க, கேரள அன்பர்களும் அதே பதிலைக் கூறி இருக்கின்றனர்.
O
சிறிது நேரத்தில் யோகியிடமிருந்து ஒரு வெடிச் சிரிப்பு கிளம்ப, அவர்கள் அழுதபடியே தாங்கள் யானைகளை கொன்று தந்தம் கடத்தி விற்பவர்கள் என்றும் இப்போதும் அதற்காகவே சேலம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர்.
O
யோகி அந்தத் தவறை இனி செய்ய வேண்டாம் என்றும் ஊர் திரும்புமாறும் அறிவுரை கூறி விடை தந்துள்ளார்.
O
அவர்கள் விடைபெறும்போது, இப்போது எங்கே போகிறீர்கள் என்று கேட்க, அவர்கள் சேலம் போய்விட்டு ஊர் திரும்புவதாக கூறியுள்ளனர்.
O
யோகி அவர்களை சேலம் போக வேண்டாம் நேராக ஊருக்குப் போய்விடுங்கள் என்று எச்சரித்துள்ளார்.
O
அவர்கள் யோகியை வணங்கி விடைபெற்றனர்.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா