
அறிவு ஜீவி சுஜாதா வாசகர் வட்டம்
என் முறையில் சொல்கிறேன்.
இருள்.
பரிச்சயமில்லாத நகரத்தில் அனுபவங்களைத் தேடி அவன் வினோதமான தெருக்களின் ஊடே நடந்து சென்று கொண்டிருந் தான். ஏதோ ஒரு சந்து முனையில் மெலிதான நறுமணம் வீசியது. அதை நோக்கிச் சென்றான். மங்கலான வெளிச்சத்தில் ஒரு பெண் தெரிந்தாள் அவளுடைய மென்மையான உடை, அவள் உடலின் வளைவுகளுடன் மெல்லிய காற்றில் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த அமைப்பு அவனும் கிறக்கத்தை ஏற்படுத்தியது. அவள் அருகில் சென்றான்.
“எங்கே போகிறாய்?” என்றாள்.
“தெரியாது” என்றான்.
“என்னுடன் வா” என்றாள்.
“எங்கே?” என்றான்.
“வந்தால் தெரியும்”.!
இப்பொழுது அவன் அவளுடன் நடந்தாள். அவன் கையை நாடிக் கோத்துக் கொண்டாள் அவன் உடலுடன் ஓட்டிக் கொண்டாள். “நீ யார்?” என்றாள்.
“கேள்விகள் கேட்காதே. எதிர்பாராது நிகழும் அனுபவங்களில் எப்போதுமே சுவை அதிகம் பேசாமல் என்னுடன் வருவாயாக”
பேசாமல் சென்றான். இருள் படிதி வாசல் தாண்டி முனகும் மரப்படிகள் ஏறி அழைத்துச் சென்றாள் ஓர் அறைக்கதவைத் திறந்தாள்.
“க்ளிக்!” அறையின் மத்தியில் நிர்வாணமாகத் தொங்கிக் கொண்டிருந்த பல்ப் எரிந்தது. எதிரே ஒரு கட்டில் இருந்தது. அதில் சுத்தமான படுக்கை விரிந்திருந்தது. அவள் படுக்கைக்குச் சென்று உட்கார்த்தாள். சோம்பல் முறித்துக் கொண்டாள். அவன் வாசலிலேயே நின்றான். அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. சிக்கென்ற உடையில் மென்மையின் ஊடே சரியாகச் ஸ்ருதி கூட்டப்பட கித்தார் வாத்தியம்போல் இருந்தாள்.
“உள்ளே வா” என்றாள்.
அவன் அருகே அவள் செல்லச் செல்ல மல்லாந்திருந்த அவளின் மார்பு அமைதியான கடலின் மேல்பரப்பு போல மூச்சுக்கேற்ப அசைந்தது. அவள் உடை கலைந்தது. கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தான். அவன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு அவனைத் தன்மேல் படுத்துக் கொள்ள வைத்தாள்………. மறுபடி அந்த மணம்…
அவன் மெல்லிய விரல்கள் அவன் கழுத்தில் விளையாடின. அவன் சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாகக் கழற்றின.
“விளக்கு எரிகிறது. அணைத்து விடுகிறேன்” என்று எழுந்திருக்க முற்பட்டான்.
அவளை அணைத்துக் கொண்டு தடுத்தாள். ‘போகாதே! நான் அணைக்கிறேன் விளக்கை” என்றாள்.
படுத்திருந்த வாகிலேயே அவளுடைய இடது கை ஒயிலாக…. அறையின் குறுக்கே எதிர்ச் சுவர் வரை
நீ………….ண்…………..டு
விளக்கின் ஸ்விட்சை அணைத்தது.
இருள்!
