செ.புனிதஜோதி
எதையோ தேடிக் கொண்டிருக்கும்
முகில்…
ஆத்ம திருப்தியில்லாமல்
அந்தரத்தில் ஊசலாடுகிறது …
தெளிந்த நீரோடையில்
மிதந்து செல்ல அவா….
பாசியின் பிடிப்பில்
வழுக்கி கொண்டே
எல்லையைத் தாண்டுகிறது..
வகுத்த திட்டங்கள்
உடைந்து அழுகிறது…
நினைக்காத மலர்
பூத்து வியப்பில்
ஆழ்த்துகிறது..
வெறுமையை மையலாய்
வார்த்துக் கொள்கிறது….
நிசப்தத்தில் பற்றி
எரிகிறது அந்திவானம்..
கிட்டத்தட்ட
மனிதர்களின்
மனப்பிரதி பிம்பமாய் எதிரொலித்து
சிதறுகிறது அண்டவெளி எங்கும்.
