புஷ்பால ஜெயக்குமார்
அவன்
அவனை அவனது
விதியின் வலையிலிருந்து
இறக்கைகள் படபடக்க
ஒரு பறவையைப் போல்
விடுவிக்கவேண்டும்
அவன் நம்புவது தான்
அவன் வாழ்க்கையென்றால்
அவன் ஏன் அவன் நினைவில்
சோகம் எனக் கான வேண்டும்
அவனைச் சிந்திக்க வைக்கும்
இரசாயன கொந்தளிப்பில்
எது அவனது மிச்சம்
அவன் மட்டுமே இருக்கும்போது
அவனது நடவடிக்கையை
கவனிப்பது யார்
அவனது கடிகாரத்தை ஓட்டும்
சாவி யாருடையது
அவனுக்கு வேறு
வழியில்லையென ஆகும்போது
அது அதுவாகவே மாறும்போது
அவன் விழித்துக்கொள்கிறான்
அவனை அவனாக
