இடப் பெயர்ச்சி

பானுமதி ந

உன் கண்களின் பாவையில் படிந்தது

என் நிழல் உன் மனதில் சிறிதோ பெரிதோ

இகழ்வு கூடியது

என் கண்களின் பாவையில் விழுந்த உன்

நிழலின் அழகோ சொக்கி மயக்குகிறது

மனதைக் காட்டும் ஓர் ஆடியில்

இகழ்வும் மயக்கமும் இடம் மாறலாம்.