ஜெகன் பெ.சாமி கவிதை

ஒரு காலத்தில்
பயணமே இதுதான்!
இதை தொட்டுப்
பார்க்கவே ஆட்கள்
கூடுவார்கள்!
அரண்மனை
வாசலை அலங்கரிக்கும்!

இன்று தொடவே கூச்சப்படும்
அளவிற்கு
உருமாறியது
மக்கள் மட்டுமல்ல!
மனங்களும்தான்!

சக்கரம் போல்
சுழல்வதால்
ஏற்றுக் கொள்ளத்தான்
வேணும்!
நிலை மாறும்
என்றுதான்
சுற்றுவதே!

பழைய ஞாபகங்கள்
மட்டும்
சுற்றுகிறது!

3 Comments on “ஜெகன் பெ.சாமி கவிதை”

  1. கவிஞர் ஜெகன் பெ. சாமியின் மிதிவண்டி நினைவு பற்றிய கவிதை அருமை. மிதிவண்டியை மிதிக்க நாம் மறந்ததால் மறுத்ததால் நோய்கள் வந்து நம்மை மிதிக்க காண்கின்றோம்.
    நல்லதொரு கவிதையை தந்திருக்க கூடிய கவிஞர் வாழ்க! வாழ்க!!

  2. பத்து பைசா லுக்கு வாடகைக்கு வந்த இவர் அந்த நேரத்தில் இல்லாதோர்க்கு சொப்பனம் தான்

  3. பத்து பைசா வுக்கு வாடகைக்கு வந்த இவர் அந்த நேரத்தில் இல்லாதோர்க்கு சொப்பனம் தான்

Comments are closed.