
இரு சக்கர வண்டியினை மிதித்த போதெல்லாம் வாழ்க்கெயெனும் பயணப்பாம்பு சீறியபடியே அவன் முன் படமெடுத்தாடியது.
மனமெனும் மகுடிக்குள் அடக்க நினைத்த பொழுதுகளிளெல்லாம் வறுமையெனும் அழுத்தத்தால் இசைக்க முடியாமல் போக காலம் அவனை இழுத்துச்சென்றது.காலனும் தான்.

இப்போது இதோ அந்த சுவற்றினோரம் நிற்கும் அந்த இருசக்கரவண்டியைப் பார்த்தால் ஓடாமேலே சரசரக்கிறது. ஏதோ ஒரு பெருங்கதையை விழுங்கி ஏப்பமிட்டபடி.
