
அப்பா மேட்இன்இங்கிலாந்து
சைக்கிளில்
ஓட்டமாய்
ஓடிக் கொண்டிருந்தார்
சைக்கிளில்
சீட்டில் உட்காரும்போது
பயம்
சைக்கிள் தானாக
அவரைச் சுமந்துகொண்டு
ஓடுகிறதா
அல்லது அவர்
ஓட்டுகிறாரா
ஒருமுறை ஓட்டும்போது
கீழே விழுந்து
இடுப்பு எலும்பை
முறித்துக் கொண்டார்
அன்றிலிருந்து சைக்கிளைப்
பெருமாள்
கோயில் பட்டரிடம்
கொடுத்து விட்டார்
