ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 20

15.10.2021
அழகியசிங்கர்

சம்பிரதாயமான வணக்கங்களுக்குப் பிறகு, ஜெகன் பேச்சைத் துவங்குகிறான்.

ஜெகன் : நேற்று நீங்கள் இல்லாமலே நானும் மோகினியும் பேசி முடித்து விட்டோம்.

அழகியசிங்கர் :  ஞாயிற்றுக் கிழமை சக்தி கிருஷ்ணசாமி விருது வாங்கப் போயிருந்தேன்..

ஜெகனும் : சி.சு செல்லப்பாவிற்குத் தமிழே எழுதத் தெரியாது என்று என் நண்பர் குறிப்பிடுகிறார்.

அழகியசிங்கர் :நான் இதை என் இலக்கிய நண்பர் ஒருவரிடம் கூறினேன்.  அப்படித்தான் சிலர் செல்லப்பாவிற்குத் தமிழே தெரியவில்லை, மௌனிக்கு எழுதவே தெரியாது என்றெல்லாம் சொல்வார்கள்.  அதெல்லாம் உண்மையில்லை என்றார்.

மோகினி :  ஒரு இடத்தில் செல்லப்பா இப்படி எழுதியிருக்கிறார். எழுத்துக்குத்தான் இலக்கணமே தவிர, இலக்கணத்திற்கு எழுத்து இல்லை என்று கூறி உள்ளார்.

ஜெகன் : தினமணி கதிர் என்ற வார்த்தையைத் தினமணிக் கதிர் என்றுதான் எழுத வேண்டும்.  சி.சு செல்லப்பாதான் தினமணி கதிர் என்று எழுதி க் கை தவிர்த்து விட்டார்.

மோகினி : நீங்கள் புதிதாக ஒரு பா வகையைக் கண்டு பிடித்தீர்களே? அது எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது.

அழகியசிங்கர் : ஆரம்பித்த நான் இன்று தான் 50வது கவிதையை எழுதி முடித்தேன்.

ஜெகன் :  எளிதான முறையில் அதை எழுதலாம். எழுத எழுத அதை எழுத வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படும்.

அழகியசிங்கர் :  இன்றுதான் 50வது கவிதையை எழுதி முடித்தேன்.  இதைக் கண்டுபிடித்து 2 மாதம்தான் ஆகியிருக்கும்.   இதோ அக் கவிதையை இங்குக் குறிப்பிடுகிறேன். 


சிரிப்பு

சிலர் சிரித்துக்கொண்டே

இருந்தனர்

ஏன் என்று

கேட்க நினைத்தேன்

அவர்கள் சிரிப்பை

அவர்கள் சிரிக்கிறார்கள்

இதில் என்ன இருக்கிறது?


மோகினி :  தமிழவன் சில கதைகள் பிளாஸ்டிக் யதார்த்தம் என்று  முபீன்  குறிப்பிடுகிறார், அதே போல் இரு பிளாஸ்டிக் கவிதை என்று குறிப்பிடலாமா?

அழகியசிங்கர் : எளிதில் மாறக்கூடிய உருவத்திற்குத்தான் பிளாஸ்டிக் யதார்த்தம் என்று கூறுவார்.  அதேபோல் உருட்டித் திரட்டி ஒரே கவிதையைப் பல கவிதைகளாக மாற்றி விடலாம்.  இந்த என்பா அதற்கு  உதாரணமாக இருக்குமென்று தோன்றுகிறது.

ஜெகன் :  ஆக மொத்தம் என்பா வெண்பாவைப் போல் இல்லாமல்  கொஞ்சம் யோசித்தால் சுலபமாக எழுதி விடலாம். 

மோகினி : இந்தப் பா இனத்தில் எழுத வேண்டுமென்று எழுத ஆரம்பித்தவர்கள் அதை விட்டு அவர்களால் வெளி வரமுடியவில்லை.

அழகியசிங்கர் : ஆமாம்.

ஜெகன் : இன்றைய சொற்பொழிவு முடிந்து விட்டது.  நாளை சந்திப்போம்.

அழகியசிங்கர் : (கைக் கூப்பியபடியே) சந்திப்போம்.

One Comment on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 20”

Comments are closed.