செ.புனிதஜோதி கவிதை

பென்சில் கிடைக்காமல்
பேனாதான்
தூரிகையானது..
திருத்தமுடியாது
என்ற அச்சத்திலே
வரைந்து முடித்தேன்
மிதிவண்டியை.
மிதிவண்டியை ஓட்டும்
வயதான தாத்தாவை விட
அதீத
எச்சரிக்கையோடு
மேடு,பள்ளங்களில்
இறங்கி ஏறி
இதயதார்சாலையில்
ஓட்டிக்கொண்டிருந்தேன்
அன்றையத் தினத்தில்.