க.நா.சு கவிதை

உலகம் உய்ய
அறிஞர்கள் ஞானம் பெற
ஓயாத நடனம் ஆடி
இன்று ஓய்ந்துவிட்டான்
நடராஜன்.
இப்போது அவன்
ஆடுவது
குண்டுக்கொசு விரட்ட
கைமறித்துக் கால் தூக்கி
ஆடுகிறான்
பக்கத்தில்
மீளாத துக்கத்தில் ஆழ்ந்துறங்கும்
கோவிந்த ராஜனையோ
எந்தப் பட்டணத்து
எத்தனை கொசு கடித்தாலும்
எழுப்பி இயலாது.

One Comment on “க.நா.சு கவிதை”

  1. சிதம்பரம் தங்கி அண்ணாமலையில் படித்தேன் எழுபதுகளில்
    கொசுக்கடி தாங்கவே முடியாது
    யானைக்கால் வியாதி
    வீட்டுக்கு ஒருவர்
    நிச்சயமாய்
    காலைக்காப்பாற்றிக்கொள்வதே
    பெரியபாடு
    அவரவர்க்கு.
    தில்லை நடராஜனும் தில்லை கோவிந்தனும்
    பயந்துதான்
    குடித்தனம் நடத்தினர்
    தில்லைக் காளி மட்டுமென்ன?
    கொசுவோ கொசுவய்யா.
    மௌனி கநாசுவுக்கு
    தெரியாத சேதியா.

Comments are closed.