இலக்கிய இன்பம் 54 /கோவை எழிலன்

ஆஆய் கோயில்

கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனின் கொடைச் சிறப்பை விளக்கும் முடமோசியார் என்பவரின் புறநானூற்றுப் பாடல்.

களாப்பழம் போன்ற யாழை மீட்டி பாணர்கள் ஆயிடம் இருந்த யானைகளைப் பரிசிலாகப் பெற்றுச் சென்றதால் அவன் யானைக் கொட்டில் யானை இன்றி மயில்கள் ஆடும் இடமாக இருக்கிறது. அனைத்தையும் கொடையாக அளித்து விட்டதால் ஈகையாக அளிக்க முடியாத இழை அணியை (இது மங்கல அணி ) மட்டுமே அவன் அரண்மனைப் பெண்டிர் அணிந்துள்ளனர்.

இவ்வாறு அவன் அரண்மனை செல்வச் சிறப்பு குறைந்து இருந்தாலும் அனைத்து செல்வமும் கொண்டிருந்தும் தாம் மட்டும் இனிய உணவு உண்டு மற்றோர்க்கு ஈயாத குணமுடையோரின் மாளிகைகளை விடச் சிறந்ததாகும்.

செல்வத்தின் பயனே ஈதல் என்று காட்டும் புறநானூற்றுப் பாடல் இது.

“களங்கனி யன்ன
கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடுஇன் பனுவல்
பாணர் உய்த்தெனக்
களிறில ஆகிய
புல்அரை நெடுவெளிற்
கான மஞ்ஞை
கணனொடு சேப்ப
ஈகை அரிய
இழையணி மகளிரொடு
சாயின்று என்ப
ஆஅய் கோயில்;
சுவைக்குஇனிது ஆகிய
குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவுஇன்றித்
தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ்
ஒரிஇய
முரைசுகெழு செல்வர்
நகர்போ லாதே”.
வில்லெனக் கிடந்த புருவம்