தடங்கள்/ இராஜா மணி

மனைவியின் நினைவா,

மகனின் படிப்பா

மகளின் திருமணமா

அடுத்த வேளை உணவா

வாழ்வின் மீது காதலா
..
எதோ ஒன்று

உந்திந்தள்ள

சுவடுகள் அற்ற

பாதையில்
அவர் மிதித்துச்

சென்ற சைக்கிளின்

தடங்கள்

பாதையாகி
பின்
சாலையானது.

ஆனாலும்

பயணங்கள் எளிதாக இல்லை.