
மழைக்கு மண் மேல் உள்ள ஆசை தீரவில்லை!
எத்தனை
கரைபுரண்டு
ஓடினாலும்
மழைத் துளியாய்
மண்ணில் விழுவதை
நிறுத்தவில்லை!
தென்றல்
புயலாக மாறி
மேகங்கள் உருமாறி
அடர் வானம்
ஆனாலும்
அணைத்திடவே
ஆர்வம் கொள்ளும்!
அள்ள அள்ள
அமுதசுரபியாய்
சுரக்கும்
தரணியை
முத்தமிட
மறப்பதில்லை!
காலங்கள்
மாறினாலும்
கொண்ட காதலை
மாற்றாத
மழையும் புவியும்
ஆதர்ஷ புருஷர்கள்!
