
கூட்டம்
வழக்கமான மாலை நடைக்கென
பூங்கா செல்லத் தயாராய்
பேத்தி கை பிடித்து
தெருமுனை வந்தேன்.
போக்குவரத்தை
நிறுத்தியபடி
தெருமுனையில் கூட்டம்.
என்ன கூட்டம் பார்!!!
பேத்தியிடம் சொல்லியபடி
காத்திருந்தேன்.
என்னதான் ஆச்சு ?
எனப் பார்க்க
நுழைந்தேன் கூட்டத்துள்.
தாத்தா, இப்ப நாமும் கூட்டமா?
பேத்தி கேட்க,
கூட்டத்தில் சேர்ந்தபின்
நாம் இல்லை
என்றேன்.

நல்லவர் கெட்டவர்
கற்றோர் மற்றோர்
சிறியவர் பெரியார்
எல்லோரையும்
அடையாளம் இழக்க
செய்து ஆயிரம்
தலைவாங்கும்
அபூர்வ இயல்பே
கூட்டத்தின்
தனி இயல்பு…
இதை எளிமையாக
அருமையாக விளக்கி உள்ளாய் நண்பா…
கூட்
கூட்டத்தின் இயல்பு