அழகியசிங்கர்
ஒருநாய் உள்ளே நுழைந்துவிட்டது
அலுவலகத்தில் என் முன்னால் நிற்கிறது
வாட்டசாட்டமான அதன் தோற்றம்
என்னை பயமுறுத்தியது
ஆனால் உறுமவில்லை
பார்த்தால் ஒரு பெண்
பின்னால் சுற்றி சுற்றி வருகிறது
பெருமையாகச் சொல்கிறாள்
அவள்
எங்கு சென்றாலும் தொடர்ந்து வருமாம்
பஸ்ஸில் சென்றாலும்
தொடர்ந்து வந்துவிடுமாம்.
பணத்தைக் கட்டிவிட்டு
பெண்மணி வங்கிக் கிளையைவிட்டுச்
சென்றுவிட்டாள்.
நானும் பார்த்திருக்கிறேன்
பல நாய்களை
ஆனால்
இந்த நாய் மட்டும்
என் மனதில்
சுற்றி சுற்றி
சுழன்று கொண்டிருக்கிறது..
