நினைவுப் பாதை/க.நா. சு

 இரவு சாப்பிட உட்கார்ந்ததும்

     பக்கத்தறையில் உரக்க
     முனகல் கேட்டு
     எழுந்து போய் பாhக்க
     செத்துக்கிடந்த தாய்
     உருவம் அடியோடு மறந்துவிட்டது.
     ஆனால்
     அழ வேண்டிய
     மாதிரியா நீ அழுதாய்
     என்று மறுநாள்l
     பாட்டி
     கேட்டது மட்டும்
     பசுமையாய் நினைவில்
     பதிந்திருக்கிறது.”

நன்றி : அதிரன்