
கி.வா.ஜவை
நான் இலக்கிய அளவில்
மதிக்க மாட்டேன். அவருக்குத்
தெரிந்தது எனக்குத் தெரியாது
என்று ஏற்றுக் கொள்கிறேன்
ஆனால் அவருக்கு நான்
கடன்பட்டவன். 1938ல்
எனக்கு ராயர் கபேயை
கச்சேரித் தெரு மைலாப்பூரில்
காட்டித்தந்தார. இப்போதும்
பலசமயம் திருப்தியாக ரவா தோசை சாப்பிடப்
போய் வருகிறேன்.
- பகிர்வு : அனிதா ராஜேஷ்

இதற்கு கி. வா. ஜ அவர்கள் க.நா.சு நடையில் பதில் சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனைக் கவிதை…
*ஒரு வில்லங்கக் கற்பனை*
கி.வா.ஜ கவிதையைப்
படித்தத் தாக்கத்தில்
கி. வா. ஜ, கா. நா. சு விடம்…
ரவா தோசை பிடித்த அளவிற்கு
என் க(வி)தை பிடிக்காமல்
போனதற்கானக் காரணமென்ன?
உன் நாக்கா?
இல்லை என் எழுத்தா?
இல்லை இரண்டுமா?
இல்லை வேறொன்றா?
எதுவாயினும் நீ
எனக்குக் கடன்பட்டவன்!!!
– அனிராஜி, அட்லாண்டா, அமெரிக்கா.