
அறியாமையின் வாசல்கள்
ஆயிரம் ஆயிரமாய்ப்
திறந்தே கிடக்கின்றன
போகும் இடமெங்கும் ஒன்றில் நுழைகிறார்கள் மற்றொரு வாயில் வழியாக எல்லோரும் வெளியேறுகிறார்கள்
அறியாமையின் கதவுகள் இரண்டே இரண்டுதான் ஒன்றின் பெயர் அறியாமை மற்றதன் பெயர் அதை அறியாமை நான் இன்னமும் நம்புகிறேன் மல்லிகையின் வாசனையை அவள் விரும்புகிறாள் என்று
ஒவ்வொரு நாளும் சூரியன் அறியாமையைக் கலைக்க முயல்கிறான் மேற்கே அவன் போகப் போக அவன் விட்டுச் சென்ற கிழக்கின் வெளியில் அறியாமை கம்பீரமாக நடக்கிறது நான் அறியாமையின் நேசன் அறியாமையின் காயங்களை ஆற்றுகிறேன்.
மரத்தின் அடியில்
ஓய்வில் மாடுகள் அமர்ந்திருக்கும் இங்கிதமான அறியாமையின் கீதங்களை நான் கேட்டிருக்கிறேன்
தண்மையும் வெப்பமும் ஒன்றை ஒன்று மிகாத அறியாமையின் ஸ்பரிசங்களை நான் ரசித்திருக்கிறேன்
தெரியுமா தோழர்களே!
அறியாமைக்குப் பார்வை கிடையாது எனவே அது நன்றாகப் பார்க்கிறது
அறிவினால் விரட்டப்பட்டாலும் ஓடிக்களைத்ததில்லை அறியாமை
அறியாமையின் தேனை
குடும்பம் உறிஞ்சுகிறது. அப்போது கடவுள்கள் கூடி அமர்ந்து ஒருவரை ஒருவர் சாப்பிடச் சொல்லி உபசரிக்கிறார்கள் கடவுளின் ஜாடியில் எத்தனை பேர் வந்தாலும் அறியாமை போக்கும் அமுதம் இருக்கிறது உண்ண வாருங்கள் தோழர்களே.
முகநூலில் தகவல் : எச்.முஜீப் ரஹ்மான்
