தாகூர் பற்றி./கலாப்ரியா

பேசாமல் தாகூரின் ஸ்ட்ரே பேர்ட்ஸ் படித்து பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கலாம் போல. சுமார் 120 வருடங்களுக்கு முன்பே என்னமாய் எழுதியிருக்கிறார்
நான் தமிழில் தர முயன்றிருக்கிறேன்

செலுத்திச் செலுத்தி இழந்த அன்பினால்,வாழ்க்கைக்கு செல்வம் கொழிக்கிறது- தாகூர்


கலைஞன் இயற்கையின் காதலன், அதனாலேயே
அவன் அவளுக்கு அடிமையும் எஜமானனும்- தாகூர்


மனிதன் அவனுக்கே தடுப்புகளைக் கட்டிக் கொள்கிறான் – தாகூர்


இந்தப் பெரிய நிலம் விருந்தோம்புகிறது எளிய புற்களின் உதவியோடு- தாகூர்


வானின் மூலையில் பவ்யமாய் நின்றது சிறு மேகம். அதற்கு வைர முடி சூட்டியது காலைப் பொழுது – தாகூர்


அசையாமலிரு, என் மனமே, இந்த உயர்ந்த மரங்கள் (யாரோ ஒருவருடைய) பிரார்த்தனைகள்- தாகூர் .


பாராட்டுகள் என்னை வெட்கமுறச் செய்கிறது, ஏனெனில் ரகசியமாய் அதைப் பிச்சை போடக் கேட்டிருந்தேன்
-தாகூர்


எல்லா நட்சத்திரங்களையும் இழந்து நிற்கும் காலை வானத்திடம் அழுது கரைகிறகிறது பூ , ”நான் என் பனித்துளியை இழந்து விட்டேன்”
-தாகூர்

One Comment on “தாகூர் பற்றி./கலாப்ரியா”

  1. வானின் மூலையில் பவ்யமாய் நின்றது சிறு மேகம். அதற்கு வைர முடி சூட்டியது காலைப் பொழுது – தாகூர்

    எல்லா நட்சத்திரங்களையும் இழந்து நிற்கும் காலை வானத்திடம் அழுது கரைகிறகிறது பூ , ”நான் என் பனித்துளியை இழந்து விட்டேன்”
    -தாகூர்

    இயற்கையின் அழகை வரையும் போதும் என்ன ஒரு கவித்துவம்! அற்புதம்!

Comments are closed.