இன்று சக்ஸ் ( வெங்கடேஷ் சக்கரவர்த்தி) நினைவேந்தல் கூட்டம்../எம்.டி.முத்துக்குமாரசாமி

நல்லவேளையாக வாசு எனக்கு ஒரு பாட்டில் குடிநீர் ஏற்பாடு செய்து தந்தார். 1985-1995 வரையிலான பத்தாண்டுகளில் தமிழ் சிந்தனைத்துறையில்

இன்று சக்ஸ் ( வெங்கடேஷ் சக்கரவர்த்தி) நினைவேந்தல் கூட்டத்திற்கு எந்தவித தயாரிப்புகளும் இன்றி பேசச்சென்றேன். உள்ளத்திலிருந்து, ஞாபகத்திலிருந்து பேச என்ன வருகிறதோ அதைப் பேசலாம் என்ற எண்ணம். பிரீதம், மாளவிகா, சம்யுக்தா, யாழினி, மேடையிலிருந்த சக்ஸின் புகைப்படம் எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தவுடன் வாய், தொண்டை எல்லாம் உலர்ந்துபோய்விட்டது. நல்லவேளையாக வாசு எனக்கு ஒரு பாட்டில் குடிநீர் ஏற்பாடு செய்து தந்தார். 1985-1995 வரையிலான பத்தாண்டுகளில் தமிழ் சிந்தனைத்துறையில் எப்படிப்பட்ட paradigm shift ஏற்பட்டது அதை உண்டாக்கியதில் சக்ஸின் பங்கு என்ன என்பதை கோடிட்டுச் சொன்னேன். இலக்கியம், ஓவியம், இசை, தத்துவம் என்று மட்டுமே இருந்த நம் அறிவு சேகரத்தில் உலகத்திரைப்படங்களைச் சேர்த்ததில் சக்ஸ் எவ்வாறு பங்களித்தார் அதை நான் எவ்வாறாக படைப்பூக்கம், கலை நேர்த்தி ஆகியவற்றைப் புரிந்துகொள்ள பயன்படுத்திக்கொண்டேன் என்றும் சொன்னேன். எங்களுக்குள் நடந்த பல விவாதங்களின் சாரம்சம் என்ன என்பதையும் சொல்ல முடிந்தது என்று நினைக்கிறேன். சக்ஸ் பேசியவற்றின், அரசியல் என்ன என்பதை அ.மார்க்ஸும், பிரளயனும், அம்ஷன்குமாரும் சுட்டினார்கள் அந்த அரசியல் வெளியில் எப்படி பிரீதம், மங்கை போன்ற பெண்கள் பங்கேற்றார்கள் என்று மங்கை பேசினார். கடைசியில் பிரீதம், மாளவிகா ஆகியோர் பேசியது மனதை உலுக்குவதாக இருந்தது. சஷிகாந்த் சுருக்கமாக சக்ஸ் விட்டுச்சென்ற projects சிலவற்றை முடிக்கவேண்டும் என்று பேசியது மட்டுமே நாம் செய்யத்தக்கது என நினைத்துக்கொண்டேன்.