
எனக்குத் தேவை தனியறை
அதிலொரு
ஜன்னல்.
சூரியக் கதிர்கள் உள்வர
மூச்சுக்காற்று வெளிசெல்ல
பட்டாம்பூச்சி உள்வர
புழுக்க வாசனை வெளிச்செல்ல
கம்பியை பிடித்துக்கொண்டு சாலையை வேடிக்கைப் பார்க்க
வியர்வைத் துடைத்த துண்டை அலசி காயப்போட
வேண்டும் என்றால் திறந்துக்கொள்ள
வேண்டாம் என்றால் மூடி வைக்க.

காணி நிலம் குறுகியதோ !