ஐயப்பன் மாதவன் கவிதை

தானே மலரும் மலர் போல எதுவுமில்லை
தன் போக்கில் மலர்ந்து இதழ் விரிக்கும் கணம் தெரியாது
தன்னழகு புரியாது
நிலத்தின் மர்மமறியாது
பெரிதாய்ப் பூத்து நிற்க
பெருங்காற்று வந்து
அசைத்துப் பார்க்கிறது
பெரும் மழை வந்து
நனைத்துப் பார்க்கிறது
பட்டுப்பூச்சிக்கு தேன் உண்ண
தன்னையே தந்துவிட்டு
மரணம் உணராது
சுள்ளென்ற வெயில் பட்டு
காய்கிறது
ஒரு நாள் கருணையற்ற
நிலத்தின்
சூக்குமத்தில்
உடலூறி இருந்த
இடம் தெரியாமல்
மறைகிறது
இனி தானே மலரும் அம்மலர்
எங்கே என்று கேள்விக்கு இடமில்லை.

ஆகஸ்ட் 7
காலை 1 22