யோகி இன்றொரு சேதி -118/விசிறி சங்கர்


O
இந்த பிரபஞ்ச இயக்கத்தோடு பேரிசைவில் பயணிக்கும் வாழ்க்கை நெறியை நமக்கு உணர்த்தியவர் யோகி.
O
இந்தப் பிச்சைக்காரன் மாற்றங்களை பொதுவாக விரும்புவதில்லை என்றுரைத்தவர் யோகி !
O
குமரி மாவட்டம் குமாரகோவில் ஸ்ரீ ராம்ஜி ஆஸ்ரமம் உருவாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்ரம முகப்பில் அமைந்துள்ள சிறிய கூரை முகப்பை மாற்றி, பெரிய ஆஸ்பஸ்டாஸ் கூரை ஒன்றை அமைக்க விரும்பினர்.
அதற்கு யோகியின் அனுமதி கேட்ட போது, அது மிக அவசியமா என யோகி கேட்டார்.
O
ஆஸ்ரமம் வரும் பக்தர்களுக்கு அது வசதியாக இருக்கும் என்று மாதாஜி ஓம் பிரகாஷ் யோகினி கேட்டுக் கொண்டார். பின்னர் அனுமதி தந்தார், ஒரு நிபந்தனையும் விதித்தார்.
” Without disturbing the existing beauty… ” ( தற்போது இருக்கும் இருப்பின் அழகைப் பாதிக்காதவாறு )
O
ஒரு ஆஸ்ரம கட்டிடத்தின் முன்கூரை அமைப்பதில் கூட ( பிரபஞ்ச ) இருப்புக்கு சிறு இழை கூட சேதாரம் வரா வண்ணம் நமது செயல் இருக்க வேண்டும் என்ற யோகியின் கவனம், இங்கு
கூர்ந்து நோக்கத் தக்கது.
O
இந்த பிரபஞ்சம் பெரும் ஒத்திசைவில் இயங்கி வருகிறது.
இங்கு ஒவ்வொன்றும் அதனதன்
இடத்தில் பொருந்தி இருக்கிறது.
பிரபஞ்ச பேரிசைவிற்கு ஏற்பவே நமது வாழ்வின் இயக்கம் இருத்தல் வேண்டும் என்பது உன்னதமான அணுகுமுறை. அதை நமக்கு அன்பாக உணர்த்துகிறார் யோகி !
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா