
எட்கார் ஆலன் போவின்
கதைகளைப் படிக்கும்போது
மிகவும் உஷாராகத்தான் படிக்க வேண்டியதா இருக்கிறது.
ஏதாவது ஒரு வார்த்தையின் இடத்தையும் அர்த்தத்தையும்
கவனிக்காமல் விட்டுவிட்டால், அவன் என்னதான் சொல்ல
வருகிறான் என்பது தெரியாமலே போய்விடுகிறது. இத்தனைக்கும்
அவன் எழுதியதெல்லாவற்றையும்பத்திரிகைத்தேவைக்காக
அவசர அவரசமாக
எழுதினான் என்று தான் தெரிகிறது.
கவனமாகப் படிக்காவிட்டால் அவன் அர்த்தப்படுத்துவதற்கு
எதிர் மறையாக வேறு விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ள
ஏதுவாகியிருக்கிறது. லிஜீயா
என்கிற கதையில் அவன்
தனது இரண்டாவது மனைவியைக் கொன்றானா;
ஆகாயத்திலிருந்து கொட்டிய விஷத்துளிகள்
மனப்பிராந்தியா
உண்மையின் எதிரொலியா, பிரதிபலிப்பா என்று
கண்டு கொள்ள முடியாமல் திணறிப் போவோம்.
தன் கூடப்பிறந்தவனைக் கொன்றானா?
யாரையோ
நட்புடன் உயிரோடு புதைத்துச்
சாக விட்டு விட்டுத்
தான் செய்த தவறுக்குத்
தண்டனை வேண்டி
நின்றானா? – கவனித்துப் படித்தால்தான் தெரியும்
கவனித்துப் படித்தாலும் இரண்டு விதமாகவும் தெரியும்
வேறு விதமாகவும் பதினாறு விதங்களாகவும்
அர்த்தப்படுத்திக் கொள்ள அவன் உபநிஷத்துக்கள்
எழுதினானா? வெறும் கதைகள் தான் எழுதினானா?
போவின்எழுத்துக்கலையின்
பூர்ணத் தன்மை
உனக்குப் புரிகிற போது இலக்கியத்தின் அமைதியும்
அமைதியின்மையும் பலித்து விட்டது போல
ஒரு நினைப்பு ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதிற்கில்லை

Excellent poem. One should read k n s poems