ஒத்தடக்கருவி/ விமலன்

எது சொல்லியும் சமாதானம் கொள்ள
மறுக்கிறவராய் அவர்.
எது செய்தும் அதை புறக்கணிக்கிறவராய் அவர்.
தேவை நிமித்தமாய் மாதத்தின் ஓர் நாளில்
தனது சேமிப்பிலிருந்து பணம் எடுக்க வருகிற அவர்
அன்றும் வருகிறார் அதே முதுமை அணிந்தும்
கசலைத்தோற்றம் கொண்டுமாய்!
அவர் அணிந்திருக்கிற உடை
அவருக்கான பிரத்தியேகம் கொண்டிருக்குமோ,,,,?
சவரம் செய்யப்படாத ஒரு வாரத்தின் தாடி
அவரின் தனித்த அடையாளமாக..,!
எப்பொழுது அவர் வந்த போதும்
எப்பொழுது அவரை காண நேர்கிற போதும்
அதே ஊதாக்கலர் சட்டையும்
ஒற்றைத்தட்டு வேஷ்டியும்தான்
அவருக்கு சாஸ்வதப்பட்ட உடையாக
அடையாளப்படுகிறார்.
மெல்லிய காற்றைப்போல் தவழ்ந்து நுழைகிற அவர்
தன் தேவையை அலுவலகத்தின் உள்ளமர்ந்திருக்கிற ஊழியரிடம் கணக்குப்புத்தகத்தைக் கொடுத்து விட்டு ஏறிடுகிறார் அவரை,,!
தங்களது முதலீட்டிற்கான வட்டிப்பணம் வரவாக இன்னும்
ஓரிரு நாட்கள் தாமதமாகலாம்,
ஆகவே,,,என அவர் முழுமை கொண்ட
வார்த்தையை முடிக்கும் முன்னாகவே
குறிப்பிட்ட ஊழியர் ஒருவரின்
பெயரையும் அடையாளத்தையும் கூறி
பணி நிமித்தமாய் வெளியில் சென்றிருக்கிற
அவர் வரும் வரை காத்திருந்து
அவர் வந்ததுமாய் செல்கிறேன்.
அவரது பேச்சும் பார்வையும்
ஒத்தடம் இடும் என் மனதிற்கு
எனச்சொன்னவராய் அமர்கிறார்!

3 Comments on “ஒத்தடக்கருவி/ விமலன்”

Comments are closed.