இலக்கிய இன்பம் 56/கோவை எழிலன்

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்

நாம் பல பாவங்களைச் செய்தாலும் இறக்கும் போது பகவத்நாமாவைச் சொன்னால் அப்பாவங்கள் நீங்கி விடும் என்பதற்கு அஜாமிளன் நாராயணன் என்ற தன் மகனை இறக்கும் போது அழைத்த கதையை பக்தி உலகில் சொல்வர்.

இங்கு பெரியாழ்வாரோ இறக்கும் போது உடலும் மனமும் நலிந்த நிலையில் உன்னை நினைக்க என்னால் முடியாது. சரண்புகுந்த யானையையே காத்த நீ என்னையும் காக்க வேண்டும் என்று இப்போதே உன்னைச் சரண்புகுகிறேன். பின்னால் உன் நாமத்தைக் கூறவில்லை என்று கோபிக்கக் கூடாது என்று சரணாகதியை முன்பதிவாகக் செய்கிறார் இப்பாசுரத்தில்

“துப்புடை யாரை அடைவது எல்லாம்
சோர்வி டத்துத் துணைஆ வர்என்றே!
ஒப்புஇலேன் ஆகிலும் நின்ன டைந்தேன்!
ஆனைக்கு நீஅருள் செய்த மையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு
ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்!
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே”!