
ஞா.தியாகராஜன் கவிதை
நானே இந்தக் குளத்தின்மீனும் பாசியுமாக இருக்கிறேன்
நானே இந்தக் குளத்தின் கரையாகவும் தடுப்பாகவும் இருக்கிறேன்
நானே இந்த நீர்தேக்கத்தில் நீர்தேக்கத்திற்குக் குளமெனப் பேர் வைத்தவனாக
இருக்கிறேன்
காய்ந்த குளத்தின் சகதியாகவும் நானே இருக்கிறேன்
வற்றாத குளத்திற்கான மழையாகவும் இருக்கிறேன்
கவனம் நீங்கள் ஒரு பிச்சைக்காரனை அல்ல
ஆழம் தெரியாத குளத்தைதான் கடந்து கொண்டிருக்கிறீர்கள்.
நன்றி : போகூழ் – ஞா.தியாகராஜன் – வெளியீடு : மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – 836 453 தொலை பேசி : 9894605371 – விலை : ரூ100 – பக்கம் : 96
