இப்படியும் ஒரு மனிதரா?

ஆண்டு 1968. செப்டம்பர் 14. அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மெமோரியல் மருத்துவமனை. அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அவர்கள், மெதுவாக, அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்கிறார்.

படுக்கையில் குள்ளமாக ஒரு மனிதர் அசந்து போய் படுத்திருக்கிறார். அவரின் தலையணை அருகே, தலையணையைப் போலவே, ஓர் பெரிய புத்தகம்.

நாளை காலை உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளேன். தயாராக இருங்கள்.

ஒரு கணம் தயங்கிய அம் மனிதர், மருத்துவரைப் பார்த்துக் கேட்டார்.

அறுவை சிகிச்சையினை ஒரு நாள் தள்ளிப் போடலாமா?

மருத்துவருக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை.

நீங்கள், ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி என்றல்லவா கூறினார்கள். நீங்களுமா, நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கிறீர்கள்?.

அம்மனிதர் மெல்லச் சிரித்தார். தனது தலையணையின் அருகில் இருந்த, பெரிய புத்தகத்தைச் சுட்டிக் காட்டினார்.

இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து முடிக்க இன்னும் ஒரு நாள் கால அவகாசம் தேவைப் படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்தபின், உயிருடன் இருப்பேனோ? இல்லையோ? என்பது தெரியாது. எனவே உயிருடன் இருக்கும்பொழுதே, இப்புத்தகத்தை முழுமையாய் படித்து முடித்துவிட விரும்புகிறேன்.

இப்படியும் ஒரு மனிதரா? மருத்துவர் பேச்சின்றி நின்றார்.

நண்பர்களே, இம் மாமனிதர்தான்
பேரறிஞர் அண்ணாதுரை.

இணையத்தில் இருந்து எடுத்தது

முக நூல் பதிவு : ஆர்.கந்தசாமி