
கோலம் போடத் தெரியாது
முறுக்கு சீடை செய்யத்
தெரியாது
வெண்ணெய் கடையத் தெரியாது
உன்னைப் போற்றும்
பஜனைகள் சுலோகங்கள் பாடத் தெரியாது
உபவாசம் இருக்க முடியாது
பூண்டு வெங்காயம் முட்டை இல்லாமல்
சமைக்கத் தெரியாது
கடை வெண்ணெய்
படைக்கிறேன்
உண்மையை
மறைக்காமல் பேச
இயல்பாக
அன்பு செலுத்த
ஆயுசுக்கும்
செய்நன்றி மறவாமல் இருக்க
நொந்தவரை முடிந்த வரை விரைவாக மன்னிக்க
என்றுமே என் மனதில்
வெறுப்பு தோன்றாமல் இருக்க
வரம் தா
கண்ணா

அருமை…அருமை.