ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 46/அழகியசிங்கர்

16.10.2022
ஞாயிறு

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

 மோகினி:  சமீபத்தில் வண்ணநிலவன், ராஜேந்திர சோழனுக்கு விளக்கு விருது கிடைத்துள்ளதே? 

அழகியசிங்கர் : வாழ்த்துகிறேன்.  

ஜெகன் :  நானும் வாழ்த்துகிறேன்.  அவர்கள் இருவருமே தகுதியானவர்கள்.

மோகினி :  தகுதியானவர்களுக்கு விருது கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அழகியசிங்கர்:உண்மைதான். 

:
மோகினி : சமீபத்தில் குவிகம் வெளியிட்ட 6 புத்தகங்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

அழகியசிங்கர் :  6 புத்தகங்களில் 3 புத்தகங்கள் கவிதைத் தொகுதிகள். 'திரும்பி வந்தால் உனது' என்ற மதுவந்தி கவிதைத் தொகுதி, 'தோற்றுப்போவேனோ' என்ற காலவன் தொகுதி, 'தரிசனம்' என்ற சஞ்சயன்  கவிதைத் தொகுதி.

ஜெகன் : இதைத் தவிர மூன்று உரைநடைப் புத்தகங்கள்.  ஹெச் என் ஹரிஹரனின் அப்பாவின் சைக்கிள் என்ற சிறுகதைத் தொகுப்பு, எஸ்.எல். நாணுவின் பாச்சாயணம், டாக்டர் ஜெ.பாஸ்கரனின் கடைசி பக்கம் என்ற கட்டுரைத் தொகுதி.

அழகியசிங்கர்: டாக்டர் புத்தகம் மட்டும் எழுதி விட்டேன்.  மற்றப் புத்தகங்களைப் பற்றியும் எழுத வேண்டும்.

ஜெகன்   இதைத் தவிர உங்களுக்குக் கிடைத்துள்ள வேறு புத்தகங்களைப் பற்றியும் எழுத வேண்டும். 

அழகியசிங்கர் :  ஆமாம்.

மோகினி :  சமீபத்தில் நீங்கள் ரசித்த சிறுபத்திரிகை.

ஜெகன் :  நான் ரசித்த சிறு பத்திரிகை  'வேட்கை'

மோகினி :  நான் ரசித்தது  டாக்டர் பாஸ்கரன் தயாரித்த 'பூபாளம்' இதழ். 

அழகியசிங்கர் : 'வேட்கை'யில்  ஒரு சிறு பத்திரிகைக்கான எல்லா லட்சணமும் இருக்கிறது. ஆனால் பூபாளம் ஒரு பல்சுவை இதழாக எனக்குப் படுகிறது. 

ஜெகன் : ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

அழகியசிங்கர் :  முதலில் டாக்டர் தயாரித்த பூபாளம் இதழை நான் குறைவாக மதிப்பிட வில்லை.  ஆனால் ஒரு சிறுபத்திரிக்கைக்கான கூறுகள் அந்தப் பத்திரிகையில் குறைவு. அதற்கு வெகுஜன இதழில் கூறுகளும், சிறுபத்திரிகைக்கான கூறுகளும்  கலந்து இருக்கின்றன. வேட்கையில் அப்படி இல்லை. 

மோகினி :   உண்மையில் ஜெ பாஸ்கரன் தயாரித்த பூபாளம் மாதிரி பத்திரிகையைத் தயாரிக்க முடியாது.

அழகியசிங்கர் :  நான் ஒப்புக்கொள்கிறேன்.  

மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.

அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.

ஜெகன்: இன்று பேசியது போதும்.

அழகியசிங்கர்.  எல்லோருக்கும் இரவு வணக்கம்.
                                                                                            (இரவு : 10.47)