புத்தாண்டே வருக/இலத்தூர் கி.சங்கரநாராயணன்

புத்தாண்டு அழைப்பு
புதுமைத் துடிப்பு
மத்தாப்புச் சிரிப்பு
மழலைக் களிப்பு
சத்தான நினைப்பு
சமத்துவ அணைப்பு
எத்திக்கும் தித்திப்பு
ஏந்தி வரும் புத்தாண்டு

இளமைத் துடிப்பு
முதுமை வனப்பு
கடமை முடிப்பு
கண்ணியம் சேர்ப்பு
ஈகை நிறைப்பு
தியாக முனைப்பு
ஆசை குறைப்பு
இனிய கணிப்பு

சோதனை எதிர்ப்பு
சாதனை குவிப்பு
போதனை ஏற்பு
புகழ்தனைச் சேர்ப்பு
நாதனைப் பணிப்பு
நமக்குச் சிறப்பு
வேதனை இல்லாத
வாழ்வு தரும் புத்தாண்டு