செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம்

  1. அந்தத் தவலை!

ஒருநாள் வ.வே.சு.ஐயர் வீட்டிலிருந்து பாரதியாரை உடனே அழைத்துவரும்படி ஆள் வந்தது. என்னவோ, ஏதோ என்று திகிலடைந்து பாரதியார் அங்கே சென்றார். ஸ்ரீ ஐயர் சாந்தமான புன்னகையுடன் வரவேற்றுப் பின்கட்டிற்கு அழைத்துச் சென்றார்.
“ஐயரே! விஷயத்தை முதலில் சொல்லும்” என்று பாரதியார் துரிதப்படுத்தினார். “வாருங்கள், சுவாமி! பொறுத்தவர் பூமியாள்வார்; அவசரப்படாதீர்கள். விரோதிகள் எந்தச் சமயத்திலும் நமது கழுத்திற்குக் கயிறு மாட்டத் தயாராகின்றார்கன் என்று தெரிகின்றது” என்று கூறிக்கொண்டே முற்றத்துக்குச் சென்றார். பாரதியும் கூடவே சென்றார்.
ஐயரின் மனைவி ஸ்ரீமதி பாக்யலக்ஷ்மி, அப்போதுான் இராற்றிலிருந்து எடுத்த வாளியில் கால்வாசி ஜலத்தோடும் ஒரு மூடியிட்ட பித்தளைத் தவலையோடும் நின்று கொண்டிருந்தார். அந்தத் தவலை! அதில் என்ன இருக்குமோ என்ற சந்தேகத்தினால், அவ்வூர் பெரிய மனிதர்கள் நான்கு பேரைச் சாக்ஷியாக அழைத்துவந்து, அதன் மூடியைத் திறந்து பார்த்தனர்.
அதில் ராஜத்து வேஷமான துண்டுப்பிரசுரங்களும், இரச்கை, மஹிஷாசுரமர்த்தினி முதலிய சக்தி படங்களும் அடங்கியிருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு நேரில் பிரெஞ்சு அரசாங்க அதிகாரிகளிடம் சென்று அவை கிடைத்த விவரத்தைச் சொன்னார்கள். அதிகாரிகள் எல்லா விவரங்களையும் கேட்டுவிட்டு, சரி, இது உங்கள் விரோதிகளின் செய்கைதான். பயப்படாதீர்கள். நாங்கள் கவனித்துக் கொள்ளு கின்றோம்” என்று கூறினார்கள். இவ்விஷயம் போலீசாருக்குத் தெரியாது. மறுநாள் பொழுது விடிந்தது. சோதனை செய்வதற்காகப் போலீஸார் ஆரவாரமாக ஐயர் வீட்டில் நுழைந்தனர். “மகராஜர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ஐயர் கூறினார். போலீஸாரை அழைத்து வந்தவர்கள் வேறு ஒன்றையும் வீட்டுக்குள் வைத்துவிடாதபடி ஜாக்கிரதையாகக் காவல்புரிந்தார் ஐயர். வீட்டில் சந்து பொந்தெல்லாம் போலீஸார் தேடியும் ஒன்றும் அகப்பட வில்லை. சமைத்து வைத்திருந்த சாம்பார், ரஸம் முதலிய வற்றில் கூடக் கையை விட்டுத் துழாவினார்கள்!
கடைசியாகக் “கிணற்றைப் பார்க்க வேண்டாமா?” என்று ஒருவர் கூறவும், ஐயர் மந்தஹாசத்தோடு போலீஸாரை நோக்கி, “ஐயா! நாங்களோ சுதேசிகள், கையிலோ காது கிடையாது! வெகுநாளாகக் கிணற்றைத் தூர் எடுக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். காசு செலவில்லாமல் அந்த உபகாரமும் செய்தால் இரட்டை சந்தோஷம்!” என்றார். அதிக ஆழ மில்லாத அந்தக் கிணற்றில் சூரிய வெளிச்சத்தில் நன்றாக உள்ளே கிடக்கும் சாமான்கள் தெரிந்தன. போலீஸார் வெட்கத்தோடு மேலிருந்தபடி உற்றுநோக்கிவிட்டு, “கிணற்றில் இறங்க நம்மால் முடியாது! ஐயரே, சிரமம் கொடுத்ததற்கு மன்னித்துக் கொள்ளும்” என்று கூறிச்சென்றனர்.
தினமும் மாலையில் ஐயரும் அவரது மனைவியும் காற்று வாங்க சமுத்திரக்கரைக்குச் சென்று விடுவார்களாகையால் உளவு தெரிந்தவர்கள் அச்சமயம் கூரை ஓட்டு வழியாக ஏறி முற்றத்திலிறங்கி மேற்படி தவலையை கிணற்றுக் குள்ளிறக்கிவிட்டுச் சென்று போலீசுக்கும் தகவல் கொடுத்தார்கள். மறுநாள் தெய்வச் செயலாக ஐயரின் மனைவி
தண்ணீர் எடுக்க வாலியை விட்டதும் தண்ணீரோடு அந்தத் தவலையும் வந்துவிட்டது. பின்புதான் மேற்கண்ட விஷயங்கள் நடைபெற்றன. தவலையை வைத்தவர்கள் இப்படி நடக்குமென்று கொஞ்சங்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த விதமாக மலைபோல வந்த பல கஷ்டங்கள் கடவுளருளால் பனிபோல நீங்கின.

பாரதியார் சரித்திரம்/செல்லம்மா பாரதி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம்”

Comments are closed.